Home /local-news /

நகர்ப்புறத்திற்கு இணையான புதிய பட்டப்படிப்புகளை கொண்டு செயல்படும் செய்யது அம்மாள் கல்லூரி..!!

நகர்ப்புறத்திற்கு இணையான புதிய பட்டப்படிப்புகளை கொண்டு செயல்படும் செய்யது அம்மாள் கல்லூரி..!!

Ramanathapuram

Ramanathapuram Syed Ammal Arts and Science College

Ramanathapuram Syed Ammal Arts and Science College | நகர்புறத்திற்கு இணையாக பாடத்திட்டத்தை கொண்டு ராமநாதபுரத்தின் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் முதன்மை கல்லூரியாக விளங்கும் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பற்றி காண்போம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நகர்புறத்திற்கு இணையாக பாடத்திட்டத்தை கொண்டு ராமநாதபுரத்தின் முதன்மையான கலை  மற்றும் அறிவியல் கல்லூரியாக விளங்கும் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பற்றி காண்போம்.

    ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டினம் செல்லும் வழியில் கூட்டாம்புளி அருகே உள்ள புல்லங்குடி என்ற இடத்தில் அமைந்துள்ளது செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 9.5 கிமீ தொலைவில் உள்ளது.

    கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்:

    இந்த கல்லூரியானது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 15 இளங்கலை பட்டப்படிப்புகளும், 6 முதுகலை பட்டப்படிப்பும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    விளையாட்டு வீரர்களுக்கு கட்டணம் கிடையாது:

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கல்வி கட்டணம் இல்லாமல் இங்கு இலவசமாக பயிலலாம் என்பது சிறப்புக்குரியதான ஒன்றாகும். அதே போல விளையாட்டு பிரிவில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு இலவச தங்கும் விடுதியும், உணவும் வழங்கப்படுகிறது.

    National Social Service (NSS) மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயத்திற்கு உதவுவது, நோய்கள் பற்றி விழிப்புணர்வு அளிப்பது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

    மேலும் Visual Communication மற்றும் Fashion Technology பட்டபடிப்புகளை அமைத்து குறைந்த கல்வி கட்டணத்தை வைத்து நகர்புறத்திற்கு இணையாக பாடத்திட்டத்தை ஊக்குவிக்கின்றனர்.
    இந்த கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகளும் பயில்கின்றனர்.

    கட்டணம்:-

    UG Course (ஒரு செமஸ்டருக்கு)

    BA Tamil – ₹8,000
    BA English – ₹8000
    BBA – ₹8000
    B.Com – ₹8000
    B.Com CA – ₹9500
    B.sc Maths – ₹8000
    B.sc physics – ₹9500
    B.sc Chemistry – ₹9500
    B.sc Computer science – ₹9500
    BCA – ₹9500
    Bsc IT – ₹9500
    Bsc Zoology – ₹9500
    Bsc Microbiology – ₹10,000
    Bsc Fashion Technology – ₹12,000
    Bsc Visual Communication – ₹ 13,000

    PG course (ஒரு செமஸ்டருக்கு)

    MA English – ₹10,000
    MSc Maths – ₹10,000
    MSc Computer science – ₹11,000
    M.com CA – ₹11,000
    MSc Zoology –₹11,000
    M.com –₹10,000

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி