Home /local-news /

குழந்தைக்கு வலிப்பு நோய் மனமுடைந்த தாய் மகளுடன் தற்கொலை... பரமக்குடியில் சோகம்

குழந்தைக்கு வலிப்பு நோய் மனமுடைந்த தாய் மகளுடன் தற்கொலை... பரமக்குடியில் சோகம்

குழந்தைக்கு வலிப்பு நோய் மனமுடைந்த தாய் குழந்தையுடன் தற்கொலை

குழந்தைக்கு வலிப்பு நோய் மனமுடைந்த தாய் குழந்தையுடன் தற்கொலை

பரமக்குடியில் எட்டு மாத குழந்தைக்கு வலிப்பு நோய் பாதிப்பால் மனமுடைந்த தாய் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமக்குடியில் சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    பரமக்குடியில் எட்டு மாத குழந்தைக்கு வலிப்பு நோய் பாதிப்பால் மனமுடைந்த தாய் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமக்குடியில் சுற்றுவட்டார பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் - திவ்யா தம்பதியினருக்கு எட்டு மாத குழந்தை உள்ளது. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. குழந்தை பிறந்ததிலிருந்து வலிப்பு நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இதனால் திவ்யா மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தனது குழந்தை வலிப்பு நோயால் மிகவும் அவதிப்படுவதாகவும், யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை எனவும் என் தாலி கயிற்றை காலம் முழுவதும் உன் இடுப்பில் கட்டிக்கொள் என கணவருக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    வலிப்பு நோய் காரணமாக 8 மாத குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லவராயனேந்தல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி