Home /local-news /

ராமேஸ்வரத்தில் மாநில அளவிலான இரட்டையர் பேட்மிட்டன் : வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை

ராமேஸ்வரத்தில் மாநில அளவிலான இரட்டையர் பேட்மிட்டன் : வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற–மாநில அளவிலான இரட்டையர் பேட்மிட்டன் போட்டி

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற–மாநில அளவிலான இரட்டையர் பேட்மிட்டன் போட்டி

ராமேஸ்வரம்  ஜெரோம் பேட்மிட்டன் அகாடமியில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன் இரட்டையர் போட்டியில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    ராமேஸ்வரம் ஜெரோம் பேட்மிட்டன் அகாடமியில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன் இரட்டையர் போட்டியில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் அடுத்த ராமேஸ்வரத்தில் சத்தியா நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெரோம் பேட்மிட்டன் அகாடமியில் 25- ஜம்புள் மற்றும் 35- ஜம்புள் மாநில அளவிலான போட்டியில் வெளியூரை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

    இதையடுத்து, நடைபெற்ற இரட்டையர் இறகு பந்து போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் காரைக்குடியை சேர்ந்த சதீஸ் மற்றும் முருகன் முதலிடமும்,

    திருநெல்வேலி ஜெரோன் மற்றும் தேனி சேர்ந்த குரு 2-ஆம் இடமும் பரமக்குடி கல்யாணகுமார் மற்றும் காரைக்குடி அருண் மூன்றாம் இடமும் ஜெரோம் அகாடமியை சேர்ந்த பஞ்சாட்சரம் ரெங்கேஸ்வரன் ஆகியோர் 4-ஆம் இடமும் பெற்றனர்.

    இதனையடுத்து 35 ஜம்புள் பிரிவில் காரைக்குடியை சேர்ந்த சதீஷ் ஹரி முதலிடமும் காளையார்கோவில் சாத்தையா திருநெல்வேலியை சேர்ந்த குரு இரண்டாம் இடம் ஜெரோம் அகாடெமி காமராஜ் திருநெல்வேலி ஜெரோன் மூன்றாவது இடம் ஆறுமுகம் கர்ணன் நான்காம் இடம் பெற்றனர்.

    இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவிலான பேட்மின்டன் இரட்டையர் போட்டிக்கு நன்கொடை வழங்கிய அரவிந்த்க்கு பேட்மிட்டன் அகாடமி சார்பாக கௌரவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக அகாடமி நிறுவனர் ஜெரோம் நன்றி உரையாற்றினார்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி