Home /local-news /

குடும்பம் குடும்பமாக தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்கள்!!

குடும்பம் குடும்பமாக தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்கள்!!

 

  இன்று தனுஷ்கோடிக்கு வந்த 

Ramanathapuram District | இலங்கையிலிருந்து 3 படகுகளில் கைக்குழந்தையுடன் 4 குடும்பத்தை சேர்ந்த 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். 

    இலங்கையிலிருந்து 3 படகுகளில் கைக்குழந்தையுடன் 4 குடும்பத்தை சேர்ந்த 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் வாழ்வதற்கு வழி இன்றி வேலைவாய்ப்பை இழந்து ஒரு வேளை உணவிற்கே திண்டாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வீதியில் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்‌. போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு ஈழத்தமிழர்கள் வரத்தொடங்கினர். இதையடுத்து, ஏற்கனவே 11 குடும்பத்தை சேர்ந்த 42 ஈழத் தமிழர்கள் அகதிகளாக இலங்கையில் வாழ வழியின்றி தமிழகத்து வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் 3 படகில் கைக்குழந்தையுடன் 4 குடும்பத்தைச் சேர்ந்த 18 நபர்கள் ஆபத்தான முறையில் பாக்ஜலசந்தி கடல் பகுதியை கடந்து தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக தஞ்சம்அடைந்தனர்.

    இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை அழைத்து விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    மேலும் போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னர் அகதிகளாக வந்தவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

    கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை 60 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி