Home /local-news /

ராமேஸ்வரம் குந்துகால் விவேகானந்தர் ஒலி, ஒளிக்காட்சி பராமப்ரிப்பின்றி வீணாகிறது...

ராமேஸ்வரம் குந்துகால் விவேகானந்தர் ஒலி, ஒளிக்காட்சி பராமப்ரிப்பின்றி வீணாகிறது...

குந்துகால்

குந்துகால் ஒலி,ஒளிக்காட்சி; ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்

Rameswaram : பாம்பன் குந்துகால்  விவேகானந்தர் மணிமண்டபத்தில்  ஒலி, ஒளிக்காட்சி மத்திய அரசு சுற்றுலா நிதி சார்பில் ரூபாய் 5.69 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாடின்றி வீணாகிறது.

    பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபத்தில் ஒலி, ஒளிக்காட்சி மத்திய அரசு சுற்றுலா நிதி சார்பில் ரூபாய் 5.69 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாடின்றி வீணாகிறது.

    சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமெரிக்காவில் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து கப்பல் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியிலுள்ள பாம்பனை அடுத்த குந்துகால் துறைமுகத்தில் வந்திறங்கினார். இதையடுத்து, அதன் நினைவாக 2013 ஆம் ஆண்டு குந்துகாலில் விவேகானந்தர் நினைவு மண்டம் அமைக்கப்பட்டது.

    இந்த விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், இங்கு வரும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ராமேஸ்வரம் கோயில் மற்றும் விவேகானந்தர் வருகையின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்க மத்திய அரசுர சுதேஷ் தர்சன் சுற்றுலா நிதி மூலம் ரூபாய் 5.69 கோடியை தமிழக சுற்றுலாத்துறையிடம் வழங்கியது.

    2020 ஆண்டு பணிகள் தொடங்கியது. இயந்திரம் மற்றும் மக்கள் அமர்ந்து இந்தக்காட்சியை காணும்மேடை அமைக்கப்பட்டு சோதனை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. எனினும் கொரோனா  கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

    இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலும், பராமரிக்காமலும் முடங்கிக் கிடந்ததால் ஒலி-ஒளி காட்சி இயந்திரம் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கிக்கிடந்தன. இவற்றை சீர்படுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை, பலமுறை கோளாறை சரி செய்தும் அவர்களுக்கு ஏமாற்றமே மட்டுமே மிஞ்சியது.

    இந்நிலையில், உடனடியாக இதன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த விவேகானந்தர் மணி மண்டபம் பகுதிக்கு மாலை வேளையில் இங்கு பணிபுரியும் காவலர்களை தவிர இந்தப் பகுதிக்கு சுற்றுலா பயணிகளோ அல்லது உள்ளூர் பொதுமக்களோ வருகை தருவது கிடையாது,

    அத்தகைய இடத்தில் 5.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒலி-ஒளி காட்சி அமைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒலி - ஒளி காட்சியை காண பெரியவர்களுக்கு 125 ரூபாயும் சிறியவர்களுக்கு 50 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், இந்த ஒலி-ஒளி காட்சி குறித்து சுற்றுலாத்துறை சார்பில் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் போதிய விளம்பர பதாகைகள் அமைத்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மட்டுமே இந்தப் பகுதியில் ஒலி-ஒளி காட்சியை காண சுற்றுலா பயணிகளை வரவழைக்க முடியும்,

    எனவே இதற்கான வேலைகளை சுற்றுலாத்துறை மூலமாக செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram, Swami Vivekananda

    அடுத்த செய்தி