Home /local-news /

சித்திரை அமாவாசை: முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்.!

சித்திரை அமாவாசை: முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்.!

சித்திரை

சித்திரை அமாவாசை; பக்தர்கள் வெள்ளத்தில் ராமேஸ்வரம்

Ramanathapuram | ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ராமநாதசுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.

    சித்திரை மாத அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்,நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்க கூடிய ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ராமநாதசுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று சித்திரை மாதத்தில் வரக்கூடிய அம்மாவாசை தினம் என்பதால் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் செய்தால் முன்பு செய்த பாவங்கள் போக்கி மோட்சம் கிடைக்கும் என்று ஒரு ஐதீகம் உள்ளது.

    இதையடுத்து, வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    இதனைதொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிக்குள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி விட்டு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    முன்னதாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் காவல்துறையினர் கோவில் வாயிலில் பக்தர்களிடம் முக கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் பொருட்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள ஒலிபெருக்கி மூலம் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரையிலும் தை மற்றும் ஆடி அமாவாசைக்கு இவ்வளவு பக்தர்கள் கூட்டம் வரும் ஆனால் சித்திரை அமாவாசைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி