மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, இயற்கை மரணம் அடையும் வரை சிறைத்தண்டனை அளிக்க உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம்.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் சின்னபாலம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் அருகில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தியதாக பெற்றோர்களின் புகார் அடிப்படையில் 2017–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கானது ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுபத்ராஅமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து, குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்ட நிலையில் அவரை இயற்கை மரணம் அடையும் வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மதுரை சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் இவருக்கு 1 லட்சத்து 10 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு பொதுமக்களிடம் வரவேற்பைபெற்றுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.