Home /local-news /

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகை்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகை்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகை்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் உதவித்தொகை்கு விண்ணப்பிக்கலாம்

இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி escholarship.tn.gov.in இந்த இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ளவர்களுக்கு செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இந்த நலத்திட்ட உதவிகளுக்கு தகுதி உடைய ஆதிதிராவிடர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட இன மாணாக்கர்கள் தமது உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பின்பு சாதிச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டையின் நகல்கள் போன்ற விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆவணங்களுடன் கல்வி இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி escholarship.tn.gov.in இந்த இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி