Home /local-news /

அக்னி தீர்த்த கரையில் உலக நன்மை வேண்டி சமுத்திர ஆரத்தி

அக்னி தீர்த்த கரையில் உலக நன்மை வேண்டி சமுத்திர ஆரத்தி

அக்னி தீர்த்த கரையில் உலக நன்மை வேண்டி அக்னி தீர்த்தத்தில் சமுத்திர ஆரத்தி

அக்னி தீர்த்த கரையில் உலக நன்மை வேண்டி அக்னி தீர்த்தத்தில் சமுத்திர ஆரத்தி

பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சேது சமுத்திர ஆரத்தி குழு சார்பில் உலக நன்மை வேண்டி மாலை சமுத்திர வழிபாடு நடைபெற்றது.

    பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் கடலில் சங்குகள் முழங்க சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.

    இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் பூஜைகள் நடத்தி சமுத்திரத்திற்கு ஆரத்தி காட்டி வழிபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு சேது சமுத்திர ஆரத்தி குழு சார்பில் உலக நன்மை வேண்டி மாலை சமுத்திர வழிபாடு நடைபெற்றது.

    முன்னதாக, கலசம் வைத்து கலசத்தில் புனித நீர் ஊற்றி பூஜைகள் நடைபெற்றது, பின்னர் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க சமுத்திரத்திற்கு முன்நின்று சமுத்திர ஆரத்தி காட்டினர்.

    அதன் பின் பூஜை செய்து வைக்கப்பட்டிருந்த புனித நீரை கடலில் விட்டு வழிபாடு நடத்தினர். இதில் வட மாநில பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சமுத்திரத்தை வழிபட்டனர்.


    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி