Home /local-news /

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் களைகட்டும் தர்பூசணி விற்பனை..

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் களைகட்டும் தர்பூசணி விற்பனை..

தேசிய

தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் களைகட்டும் தர்பூசணி விற்பனை..

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக நெடுஞ்சாலையில், வாகனங்களில் செல்பவர்கள் தாகம் தணிக்க அதிகமானோர் பழங்களை வாங்குகின்றனர்.

    கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம், வியாபாரிகள் மகிழ்ச்சி.

    கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் குளிர்பானங்கள் அருந்துவது இயல்பு, இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஆங்காங்கே தர்பூசணி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

    தர்பூசணியின் வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தர்பூசணியில் சிறிய பழம் என்றால் 3 கிலோ வரையில் இருக்கும். பெரிய பழம் என்றால் 4 கிலோ வரையிலும் உள்ளது. இதில் ஒரு கிலோ அடிப்படையில் இருபது ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கோடைகாலம் முடியும் வரை விற்பனை சூடிபிடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக நெடுஞ்சாலையில், வாகனங்களில் செல்பவர்கள் தாகம் தணிக்க அதிகமானோர் பழங்களை வாங்குகின்றனர். சிலர் பழமாகவும், சிலர் ஜீஸாகவும் அருந்துகின்றனர்.

    தர்பூசணி பழத்துடன் சேர்த்து சாத்துக்குடி விற்பதால் இரண்டின் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Watermelon

    அடுத்த செய்தி