பரமக்குடி வாரச்சந்தையில் ரசாயனங்கள் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் எழுந்துள்ளது புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்ததுள்ளது.
இதனையடுத்து, பரமக்குடி வாரச்சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் விஜயகுமார் திடீர் ஆய்வு செய்தார். ரசாயனம் மூலம் பழுக்க வைக்க்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் இருந்தால் அவற்றை அழித்துவிடவேண்டும், பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரித்தார்.
பெரும்பாலான வியாபாரிகள் இயற்கையாக பழுத்த மாம்பழங்களை விற்பனை செய்கின்றனர். மேலும் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் இல்லாததால் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கும் பழங்கள் உண்பதால் ஏற்படும் தீமைகள்
எத்திலீன், கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், போன்ற ரசாயனங்கள் கலந்து பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன.
கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள்,கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், வாந்தி போன்றவை உண்டாகும்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.