Home /local-news /

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டி ஆர்ப்பாட்டம் - ஆட்சியரிடம் மனு 

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டி ஆர்ப்பாட்டம் - ஆட்சியரிடம் மனு 

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டி ஆர்ப்பாட்டம் - ஆட்சியரிடம் மனு 

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டி ஆர்ப்பாட்டம் - ஆட்சியரிடம் மனு 

River Sand: சென்னையில் சுற்றுப்புறச்சூழல் துறையில் அனுமதி வாங்கி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அதற்கான ஃபைல் வந்து விட்டது. ஆனால் இதுவரை மணல் அள்ள அனுமதி வழங்கவில்லை

    ராமநாதபுரம் மாவட்டம்  இராஜசிங்கமங்களத்தைச் சேர்ந்த, மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிப் பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மணல் அள்ளிப் பிழைக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்.

    இராஜசிங்கமங்களத்தைச் சேர்ந்த மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி பிழைக்கும் தொழிளாலர்கள் சங்கத்தினர், தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மணல் அள்ளிப்பிளைக்க அனுமதி வேண்டும் என்று கூறி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

    கடந்த 15 வருடங்களாக R.S.மங்கலம் தாலுகா சனவேலி, கோட்டைக்கரை ஓடை பகுதியில் சுமார் 50 மாட்டுவண்டிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரசீது பெற்று , மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி சுற்றி உள்ள கிராமங்களில் மணல் கேட்பவர்களுக்கு, குறைந்த விலையில் மணல் கொடுத்து வந்தோம்.

    முன்பு இருந்த ஆட்சியில் சுற்றுப்புற சூழல் துறையில் அனுமதி வாங்க சொன்னார்கள். அந்த சமயத்தில் இருந்த ஆட்சித் தலைவர் உதவியுடன் சென்னையில் சுற்றுப்புறச்சூழல் துறையில் அனுமதி வாங்கி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அதற்கான ஃபைல் வந்து விட்டது.

    ஆனால் இதுவரை மணல் அள்ள அனுமதி வழங்கவில்லை, எனவே இந்த 50 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் தொழிளாலர்களை நம்பி 300 குடும்பங்கள் உள்ளன. தற்சமயம் பிழைப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறோம். ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கருணை கூர்ந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி பிழைக்க உத்தரவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

    இதில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி பிழைக்கும் தொழிலாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள் சந்தியாகு, ராஜேஷ் பிரபு, செல்வராஜ் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் இம்மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி