ராமேஸ்வரம் நகராட்சியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேர் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டதால்
அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டில் 12 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.கவும், 3 வார்டுகளை சுயேட்சைகளும் கைப்பற்றினர்.
இந்நிலையில், சுயேட்சையில் வெற்றி பெற்ற 2 வார்டு உறுப்பினர்கள் வெற்றி அறிவிப்பு வெளியான அப்பொழுதே சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் தி.மு.கவில் இணைந்தனர்.
இதையடுத்து, அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற மூன்று வார்டு உறுப்பினர்கள் நேற்று இரவு மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சந்தித்து திமுகவில் இணைந்தனர்.
ராமேஸ்வரம் நகராட்சி 21வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர், முன்னாள் நகராட்சி தலைவருமான ஏ.அர்ஜுனன், 14 வார்டில் வெற்றி பெற்ற த.மா. க மாவட்ட இளைஞர் அணி தலைவர் முகேஷ்குமார், 3 வது வார்டில் வெற்றி பெற்ற முருகன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
சமூக வலைதளங்களில் இதை பிற கட்சியினர் மீம்ஸ் மூலமாக கலாய்த்து வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.