ராமேஸ்வரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் 108 அடியில் அனுமன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டலுக்கு, அகில இந்திய ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பங்கேற்றுள்ளார்.
ராமேஸ்வரம் அடுத்த ஒலைக்குடா பகுதியில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் நந்தா என்பவர், ஜென்சி நந்தா அறக்கட்டளை சார்பாக இந்தியாவில் உள்ள நான்கு திசைகளிலும் அனுமன் சிலையை நிறுவ முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2010ஆம் முதன்முதலாக சிம்லாவிலும், இரண்டாவது சிலையாக குஜராத் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டிலும் தற்போது மூன்றாவது சிலையாக புண்ணிய தலமாக உள்ள ராமேஸ்வரத்தில் 100 கோடியில் 108 அடிகளில் அனுமன் சிலையை அமைக்க அடிக்கல் நாட்டி உள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதி மிகவும் புண்ணிய தலமாக கருதப்படுவதால், இங்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதோடு, இந்த புண்ணிய தளத்திலிருந்து அனுமன் இலங்கைக்கு சென்றதாக இதிகாசங்களில் கூறப்படுகிறது.
இதையடுத்து அனுமன் சிலையை அமைக்க வேண்டும் என்று ஹெச்சி நந்தா என்ற அறக்கட்டளை முடிவெடுக்கப்பட்டு இன்று அடிக்கல் நாட்டியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது அகில இந்திய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பளே முன்னிலையில் நடைபெற்றதோடு, ஏராளமான அனுமன் பக்தர்கள் மற்றும் தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.