Home /local-news /

ராமேஸ்வரம்: மகாசிவராத்திரி திருவிழா - இரவு முழுவதும் கோவில் திறப்பு

ராமேஸ்வரம்: மகாசிவராத்திரி திருவிழா - இரவு முழுவதும் கோவில் திறப்பு

ராமேஸ்வரம்: மகாசிவராத்திரி திருவிழா இரவு முழுவதும் கோவில் திறப்பு– பக்தர்களுக்கு

ராமேஸ்வரம்: மகாசிவராத்திரி திருவிழா இரவு முழுவதும் கோவில் திறப்பு– பக்தர்களுக்கு

மகாசிவராத்திரி விழா ராமேஸ்வரத்தில் நாளை இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு,  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் நாளை இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், திருவிழாவின் 7-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதை, தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி - அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை காலை 8.40 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

    நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் ஒரு மணி மற்றும் இரவு 8 மணிக்கும் மூடப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் மகா சிவராத்திரி அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனத்தையும் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Alagesan R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி