ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி விழாவின் 5ம் நாளன்று சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் ஆடித் திருவிழா மற்றும் மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது, இந்தத் திருவிழாவானது 12 நாட்கள் நடைபெறும்.
காலை, இரவு என இருவேளைகளும் அம்பாளுக்கு நாயகர் வாசல் மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று புறப்பாடு நடைபெறும்.
அதன்படி, இன்று 5ம் நாள் விழாவை முன்னிட்டு இராமநாதசுவாமி ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நாளான 1ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும், மாசி மாதத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவிற்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்து சுவாமி அம்பாளை தரிசித்து செல்வர். தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.