Home /local-news /

ராமேஸ்வரம்: 21 வார்டுகளிலும் பதவியேற்ற வார்டு உறுப்பினர்கள்

ராமேஸ்வரம்: 21 வார்டுகளிலும் பதவியேற்ற வார்டு உறுப்பினர்கள்

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம்: 21 வார்டுகளிலும் பதவியேற்ற வார்டு உறுப்பினர்கள்

Rameshwaram: நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழியுடன் கையெழுத்திட்டு பதவியேற்றனர்.

    ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும்  நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழியுடன் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டனர்.

    ராமேஸ்வரம் நகராட்சி மொத்தம் 21 வார்டுகளை உள்ளடக்கியது இதில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 106 பேர் போட்டியிட்டனர்.

    இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மார்ச் 2, காலை 9.30 மணி அளவில்  பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதில், ஆளுங்கட்சியான திமுகவுக்கு 18-வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் காலையில் பதவியேற்றனர். எதிர்க்கட்சியான அதிமுகவின் 3 வார்டு உறுப்பினர்கள் மதியம் ஒரு மணி அளவில் பதவி ஏற்றனர்.

    இதையடுத்து, பதவியேற்ற திமுகவினர் நகராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றவுடன் அவர்களின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    இறுதியாக நகராட்சி ஆணையர் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பள்ளி மாணவர், மாணவிகள் தேசியகீதம் பாடி நிகழ்ச்சியை முடித்து வைத்தனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Local Body Election 2022, Rameshwaram

    அடுத்த செய்தி