ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள், கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இப்பள்ளியில் ஒரு சில கட்டிடங்கள் மற்றும் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக் காலங்களில் கூரைகளில் ஒழுகுவதாகவும் அதேபோல மாணவர்கள் பயன்படுத்த கூடிய கழிப்பறைகள் மோசமான நிலையில், துர்நாற்றம் வீசியும் உள்ளது.
இதனால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் கழிவறையை பயன்படுத்தாமல் திறந்த வெளியை பயன்படுத்துவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரிகள் வரும்போது அன்றைக்கு மட்டும் சுத்தம் செய்து மற்ற நாட்களில் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாணவர்களிடம் கேட்கும்போது:-
தற்போது, பள்ளி கழிவறையில் சில மாணவர்கள் புகைபிடிப்பதாகவும், போதைபொருள்
பயன்படுத்தும் இடமாக மாறிவிட்டது எனவும் சக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
பெற்றோர்கள் தெரிவிக்கும் போது ஒரு பள்ளிக்கூடத்தில் விபத்து நேரிட்ட பிறகு அதிகாரிகள் பெயரளவுக்கு ஆய்வு செய்கின்றனர்.
மேலும், மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்து அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிக் கூடங்களுக்கு மாதம் ஒரு முறை சென்று பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,
தரமற்று இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் பழுது நீக்கி பணிகளை முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கும், கல்வித்துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், நகர்மன்ற தலைவருக்கும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த மாதம் சாயல்குடியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் மேற்கூரை கட்டை விழுந்ததில் மாணவர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.