ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் திருத்தேரில் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில் அகில உலக புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும் தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் முப்பெருமைகளை கொண்டதாகவும் விளங்குகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் ஆடி திருவிழா மற்றும் மாசி திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாசி மகாசிவராத்திரி விழாவான இன்று ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மீன லக்கனத்தில் அருள்மிகு சுவாமி அம்பாள் திருத்தேரில் வைக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகினர்.
திருத்தேரில் வைக்கப்பட்ட சுவாமி அம்பாளை தமிழகம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நான்கு ரத வீதிகள் வழியாக திருத்தேரை ஓம் நமச்சிவாயா என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து வந்தனர், அப்போது ஏராளமான பொதுமக்கள் சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.