உலகப் பிரசித்தி பெற்ற இராமநாதசுவாமி திருக்கோயிலில் தை அமாவாசையையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் தை அமாவாசையன்று அக்னி தீர்த்தக்கரையில் ராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், சுக்ரீவர் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்,இந்தநிலையில், நேற்று தை அமாவாசை என்பதால் அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
இதனை அடுத்து, ராமர், சீதா,லட்சுமணன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, அங்கு குருக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.