இராமேஸ்வரம் அக்னி தீர்த்தகரை கடற்கரையிலிருந்து பூங்கா செல்லும் வழியில் உள்ள நடைபாதையில் சாக்கடையில் இருந்து கழிவுநீர் நீண்ட நாட்களாக வெளியேறுகிறது.
இராமேஸ்வரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம், நீண்ட நாட்களாக உடைந்து உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து தினந்தோறும் சாக்கடை நீர் வெளியேறுகின்றது.
இதனால், அந்த பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது.
கழிவுநீர் வெளியேறி அந்த இடம் முழுவதும் பச்சை படலமாக காட்சி அளிக்கின்றது. விசப்பூச்சிகள் மற்றும் கொசுக்கள் அதிகமாக உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.