Home /local-news /

அமேசானில் விற்கப்படும் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் - விற்பனையை தடுக்க வலியுறுத்தல்.!

அமேசானில் விற்கப்படும் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் - விற்பனையை தடுக்க வலியுறுத்தல்.!

அமேசானில்

அமேசானில் கோடி தீர்த்தம் விற்பனை–தடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

Rameshwaram Ramanathaswamy Temple Theertham | ராமாயண காவியம் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள கோடி தீர்த்தத்தை ஆன்லைனில் அமேசான் செயலி மூலம் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.

    அமேசான் தளத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள கோடி தீர்த்தம் விற்பனை செய்வதை தடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில் நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

    மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என முப்பெருமைகளை கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம், அவ்வாறு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கரையில் குளித்துவிட்டு பின்பு கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிச் செல்வர்.

    இந்நிலையில், 22 தீர்த்தத்தில் முக்கிய தீர்த்தமான கோடி தீர்த்தம் அமேசான் செயலி மூலம் ஆன்லைனில் பாலாஜி என்பவரின் பெயரில் விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து, ராமேஸ்வரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோயில் நிர்வாகத்திடம் இதை தடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

    மனுவில் கூறியுள்ளதாவது:-

    ராமாயண காவியம் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள கோடி தீர்த்தத்தை ஆன்லைனில் அமேசான் செயலி மூலம் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.

    கங்கை நீர் விற்பனையில் ஈடுபட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனம் ஆன்மீக பக்தர்களின் வழிபாட்டு நம்பிக்கைக்குரிய கோடி தீர்த்தத்தை தனது வர்த்தகம் மற்றும் லாபநோக்கத்திற்காக பயன்படுத்துவதும் அதற்கு ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் உடன்படுவதும் சரியல்ல.

    ஒட்டுமொத்த ஆன்மீக நம்பிக்கையான கோடி தீர்த்தத்தை வர்த்தக மயமாக்குவது கண்டிக்கத்தக்கது. ராமேஸ்வரம் பொது மக்களின் சார்பாக எங்கள் ஆட்சேபனையும், எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம் என்று கூறினர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி