ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளுக்கு 1008ல்வலம்புரி சங்குகளால் ஆன சங்காபிஷேகம் நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று காசி விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரே 1008 வலம்புரி சங்குகள், தங்க திரிசூலம் மற்றும் தங்க குடத்தில் தீர்த்தங்கள் ஊத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீர்த்த கலசங்கள் எதிரே சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு தங்கத்திலான திரிசூலம் மற்றும் தங்க குடத்திருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது,
இதனைதொடர்ந்து தங்கக் கலசத்தில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு பிரகாரத்தில் மேளதாளங்கள் முழங்க சுற்றி வந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த சங்காபிஷேக தே காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.