பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தின் கீழ் பாம்பன் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் 1.20 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் விடப்பட்டன.
கடல் வளத்தை புதுப்பிக்கவும் இறால் உற்பத்தியை அதிகரிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பாக இறால் குஞ்சுகளை பொரிப்பகத்தில் வளர்த்து கடலில் விடப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இத்திட்டத்தின் கீழ் 3.53 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை கடலில் விடப்பட்டன. இந்நிலையில், இன்று மேலும் 1.20 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் பாம்பனில் உள்ள பாக்ஜலசந்தி கடற்பகுதிக்குள் விடப்பட்டன. இவ்வாறு கடலில் இறால் குஞ்சுகளை விடுவதால் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது, நீடித்த இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிகழ்வில், மண்டபம் மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி நிலைய தலைவர் Dr.G தமிழ்மணி அவர்களால் கடலில் விடப்பட்டு, உள்ளூர் மீனவர்கள், மீனவ சங்க தலைவர்கள், மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.