Home /local-news /

சுவாமி விவேகானந்தர் கால்பதித்த குந்துகால் மண்டபம்.. ராமேஸ்வரம் ட்ரிப்பில் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் இது..

சுவாமி விவேகானந்தர் கால்பதித்த குந்துகால் மண்டபம்.. ராமேஸ்வரம் ட்ரிப்பில் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் இது..

Kundhukal

Kundhukal Mandapam

Rameshwaram Kundhukal Mandapam | விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்று விட்டு முதன் முதலில் தாய்நாட்டில் கால் வைத்த இடம்தான் பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதி.

    குந்துகால் மணிமண்டபமானது,  ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் அமைந்துள்ள அக்காள்மடத்திலிருந்து வடக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது.

    விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் செப்டம்பர் மாதம் 1893ம் ஆண்டு 11ம் தேதி நடைபெற்ற சர்வ சமய மத மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் இந்து மதத்தின் பெருமைகளை சிறப்புகளையும் உலகம் முழுவதும் அறியச்செய்யும் வகையில் சொற்பொழிவு ஆற்றினார். பின்பு சில வருடங்கள் அங்கிருந்த, அவர் 1896ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கடல் வழியாக கப்பல் மூலம் இந்தியாவிற்கு திரும்பினார்.

    Kundhukal Mandapam


    1897-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி விவேகானந்தர் பாம்பன் பகுதியில் வந்து இறங்கினார். விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்று விட்டு முதன் முதலில் தாய்நாட்டில் கால் வைத்த இடம்தான் பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதி.

    அப்போது ராமநாதபுரத்தில் ஆட்சி புரிந்த மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தரை குந்துகால் இட்டு வரவேற்றார். இதன் காரணமாகத்தான் அந்த இடத்திற்கு ‘குந்துகால்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

    Kundhukal Mandapam


    இதன் நினைவாகத்தான் ஒரு கோடி ரூபாய் செலவில் இங்கேயே விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஓவியங்கள், புத்தகங்கள், தியான அறைகள் உள்ளன.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கே சென்று விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி அறிந்து செல்கின்றனர். நீங்களும் ராமேஸ்வரம் வந்தால் குந்துகால் மண்டபத்தை  மறக்காமல் சென்று பார்த்து விட்டு வாருங்கள்...

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி