முகப்பு /Local News /

கலைநிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்று.. கலாம் நினைவிடத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி..

கலைநிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்று.. கலாம் நினைவிடத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி..

X
கலாம்

கலாம் நினைவகம்

Ramanathapuram | 75-வது இந்திய சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் சுதந்திர போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சி

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய விடுதலையின் 75 ஆண்டுகால கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் இந்திய சுதந்திர 75ஆம் ஆண்டு திருவிழா மற்றும் சுதந்திர போராட்ட வரலாற்றை பதிவு செய்யும் அமிர்த பெருவிழா புகைப்பட கண்காட்சி அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

75-வது இந்திய சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் சுதந்திர போராட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சி பொதுமக்களுக்கு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரது புகைப்படமும் வரலாற்று காண்பிக்கப்பட்டது.

இதில், முதல் நாளான இன்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர், பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், தேசப்பற்று குறித்த திரைப்படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்பட்டது.

இந்த கண்காட்சியானது இன்று முதல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சுற்றியுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை பார்வையிட உள்ளனர்.

மேலும், தினந்தோறும் காலை 10 மணிக்கு மாணவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கமும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றபின் பிற்பகல் ஒரு மணிக்கு தேசப்பற்று குறித்த திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அதேபோல் மாலை 5 மணிக்கு இசை நாடக பிரிவு குழுக்களின் சிறப்பு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது ‌.

கண்ணையும் கருத்தையும் கவரும் கண்காட்சியை காண பொதுமக்களுக்கும் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு நமக்கு தெரியாத வரலாற்றை கூறுவதாகவும் மற்றும் இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புகளை காண்பிப்பதாகவும் அமைந்துள்ளது என்றனர்.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

First published:

Tags: APJ Abdul Kalam, Ramanathapuram, Rameshwaram