ஜெய் ஸ்ரீ இராமேஸ்வரன் அறக்கட்டளைகள் சார்பாக கடந்த 11 வருடங்களாக இராமேஸ்வரம் இலட்சுமணன் தீர்த்தம் அருகில், ஏராளமான பக்தர்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்குகின்றனர்
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி மோகன்ராஜ் கூறுகையில்:-
11 வருடங்களுக்கு முன்பு அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. சில நாட்கள் தொடரமுடியாமல் இருந்தேன். பின் கடந்து இரண்டு வருடங்களாக கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து உணவுகள் வழங்க ஆரம்பித்தோம். ஊரடங்கு காலத்தில் அனைத்து பகுதிகளிலுக்கும் சென்று உணவு இல்லாமல் தவிக்கும் யாசகர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும் உணவுகள் வழங்குகின்றோம்.
இதுவரையிலும் என்னுடைய சொந்த பணத்தை வைத்து செலவு செய்து தான் இதை நடத்துகிறேன். முதியோர் இல்லம் வைத்து சேவைகள் செய்வதுதான் எனது இலக்கு என்றும் இதை பார்பவர்கள் உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் இப்பணியை தொடரவும் மேலும் பல உதவிகள் செய்யவும் உதவிகரமாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.