ராமேஸ்வரம் மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கபடும் என்று மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியை அடுத்து நாளை (ஏப்ரல் 19) நடக்க இருந்த பேருந்து மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்ற ராமேஸ்வரம் மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் , இலங்கையில் உள்ள அனைத்து விசைப்படகுகளையும் விடுதலை செய்யக்கோரியும்,
மேலும், சிறையில் இருக்கும் 32 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், தடைக்காலம் முடிந்த பின்பும் எவ்வித பிரச்சினையும் இன்றி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, மீனவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியின் பேரில் நாளை நடக்க இருந்த பேருந்து மறியல் போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெற்றனர்.
மேலும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக மீனவர்களின் பிரச்னைகளில் தலையிட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.
நாளை நடக்க இருந்த மறியல் போராட்டத்தை வருகின்றன 21-ம் தேதி சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.