இலங்கை மன்னர் இராவணனை போரில் வென்று இலங்கையை கைப்பற்றிய பிறகு இராவணனின் தம்பி விபீஷனருக்கு இலங்கை மன்னராக முடி சூட்டிய இடம் இக்கோவில்.
இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் இரு பக்கமும் நீர்சூழ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது.
ராமர் கையில் வில்லுடன் இருப்பதால், \"கோதண்டராமர்\" என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து சீதையை மீட்டு திரும்பிய ராமருடன் வந்த விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்த புனித ஸ்தலமாக இப்பகுதி கருதப்படுகிறது.
ராமரை ஆஞ்சநேயர் வணங்கும் காட்சியை எல்லாக் கோயில்களிலும் காண முடியும். ஆனால், இங்கு ராமரின் அருகில் விபீஷணன் வணங்கியபடி காட்சியளிக்கிறார். இது ஒரு அபூர்வமான காட்சியாக விளங்குகிறது.
ராமனின் அருள் பெற்றதால் தான் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமும் கொடுத்து, \"விபீஷணாழ்வார்\" என்று இராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது.
அளவில் சிறியதான இந்தக்கோயிலில், கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் ராமானுஜரும் மட்டும் உள்ளனர்.
புராணக்கதையை உள்ளடக்கிய இக்கோவில், இராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது. விபீஷணன் இராமருக்கு உதவி செய்வதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்றார் என்பது ஐதீகம்.
இராமநாதர் கோயிலில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். மூலஸ்தானத்தில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் காட்சி தருகின்றனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.