Home /local-news /

ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

Rameshwaram Temple | இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றது.

Rameshwaram Temple | இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றது.

Rameshwaram Temple | இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றது.

    உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 2 மாதங்கள் கழித்து கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி இன்று கோவிலின் மண்டபத்தில் நடைபெற்றது.


    இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் பெறப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்று வந்தன.


    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் இராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர். இதில், 80 லட்சம் ரூபாய், 50 கிராம் தங்கம் 3 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    கடந்த 2 மாதங்களுக்கு பிறகு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி


    80 லட்சத்து 19 ஆயிரத்து 539 ரூபாய் பணம்...


    50.500 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது

    என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி