இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமேஸ்வரம் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயற்சித்த நிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.
நாடு முழுவதும் தொழிலாளர் அமைப்பின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ராமேஸ்வரம் இந்தியன் வங்கி கிளை திறந்து இருந்தது. இதையடுத்து, ராமேஸ்வரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக வந்து இந்தியன் வங்கியை முற்றுகையிட முயற்சித்தனர்.
அப்பொழுது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், தபால் நிலையம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். பின்பு காவல்துறையினரால் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.