கடலில் மீன் பிடிக்கும் பொழுது தவறி விழுந்த மீனவரின் உடல் இன்று காலை தனுஷ்கோடி பாலம் அருகே கரை ஒதுங்கியது
ராமேஸ்வரம் கடலில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவரை மரைன் போலீசார், கடற்படையினரும், மீனவர்களும் தேடி வந்தனர்.
ராமேஸ்வரத்தில் அருகே தனுஷ்கோடி ஒற்றைத்தாழை கடற்கரை பகுதியை சேர்ந்தவர் முனியராஜ் (28). நேற்று முன்தினம் ராமேஸ்வரம் தெற்கு கரையூரை சேர்ந்த கண்ணன் என்பவரின் நாட்டுப்படகில்சக மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றார்.
வலையை கடலில் போட்ட போது படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். சக மீனவர்கள் அவரை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை முனியராஜ் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் நான்கு படகில் கடலில் தேடிச்சென்றனர்.
இந்திய கடற்படையினரும், மரைன் போலீசாரும் படகில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் தேடி வந்த நிலையில் இன்று காலையில் தனுஷ்கோடி பாலம் பகுதியில் சடலமாக உடல் கரை ஒதுங்கியது.
இதனையடுத்து மரைன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.