ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் உள்ள குந்துகால் கடற்கரையில் பெண்ணின் உடல் நிர்வாணமான முறையில் கரை ஒதுங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாம்பன் குந்துகால் கடற்கரையில் அதிகாலையில் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்பொழுது கடற்கரை ஓரத்தில் கரை ஒதுங்கிய பெண்ணின் உடலை பார்த்துள்ளனர்.
இந்நிலையில், இறந்த பெண்ணின் உடல் முழுவதும் தோல்கள் உரிந்து ஊறிப் போன நிலையில் சிதைந்து காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீனவர்கள் தங்கச்சிமடம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் கடலோர காவல்படை காவல்துறையினர் உடலை பார்த்து விட்டு இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஆகிருக்கலாம் என்று கூறினர்.
இலங்கையில் விண்ணைத்தொடும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருவதால் தனுஷ்கோடி வழியாக அகதிகளாக இலங்கையில் உள்ளவர்கள் தமிழகத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறு இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வரும்பொழுது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இறந்திருக்க கூடுமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் மற்றும் நடுக்கடலில் ஏதேனும் படகு கவிழ்ந்து உள்ளதா என்று ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம்
மரைன் போலீஸார் தேடி வருகின்றனர்.
இறந்த பெண்ணின் உடலானது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.