ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடற்கரை பள்ளிவாசல் தெருவில் பூட்டிய வீட்டில் இருந்து 20 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்த வனசரக காவல்துறை அதிகாரிகள்.
வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மண்டபம் வடக்கு கடற்கரை பள்ளிவாசல் தெரு ஒரு வீட்டில் கடல் அட்டை பதப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் மகேந்திரன் வனக்காப்பாளர் ஜாஸ்மின் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்தனர் சென்றனர்.
பூட்டப்பட்ட நிலையில் உள்ள வீட்டில் சுற்றுப்புறத்தில் சோதனை செய்தபோது அது அமானுல்லா கான் வீடு என தெரியவந்தது. வீட்டை உடைத்து வன அலுவலர் சென்றனர்.
வீட்டில் 10 கிலோ பதப்படுத்திய நிலையில் உள்ள கடல் அட்டைகள் மற்றும் 10 கிலோ பச்சை கடல் அட்டைகளும் ஒரு கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வன உயிரின குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமானுல்லா கான் தப்பியோடிய நிலையில் தேடுதல் பணி நடந்து கொண்டிருக்கிறது. மேலும் டிசம்பர் 26, 2021 ஆம் தேதி தற்போதைய வழக்கில் தப்பியோடிய அமானுல்லா கான் அவரது மகன் ரியால்தின்கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.