Home /local-news /

ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தில் உலக நன்மைக்காக லலிதா சகஸ்ர நாம ஹோமம்.

ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தில் உலக நன்மைக்காக லலிதா சகஸ்ர நாம ஹோமம்.

Ramanathapuram

Ramanathapuram

Ramanathapuram District | ராமேஸ்வரம் கீழரத வீதியில் உள்ள சிருங்கேரி மடத்தில் உலக நன்மைக்காக ஜெகதாத்ரி மண்டலி சார்பாக லலிதா சகஸ்ர நாம ஹோமம் செய்யப்பட்டது.

    ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காகவும் யுத்தங்கள் தவிர்ப்பதற்காகவும் கொரோனா போன்ற நூதன வியாதிகள் பரவாமல் இருக்க வேண்டியும் ஜெகதாத்ரி மண்டலி சார்பாக லலிதா சகஸ்ர நாம ஹோமம் செய்யப்பட்டது.

    ராமேஸ்வரம் கீழரத வீதியில் உள்ள சிருங்கேரி மடத்தில் மண்டலி அமைப்பாளர் ஜானகி நம்பு வைத்திய குழுவினர் தலைமையில் 12 வேத விற்பன்னர்களை கொண்டு லலிதா சகஸ்ர நாம ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதனையடுத்து, ஜெகதாத்ரி மண்டலி சார்பாக பர்வதவர்த்தினி அம்பாளை பிரார்த்தனை செய்து கடந்த நான்கு மாதங்களாக 5 கோடி லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் முடிந்து பூர்த்தியாக 12 வேத விற்பன்னர்களை வைத்து லலிதா சகஸ்ர நாம ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இந்த ஹோமத்தில் 12 பேருக்கு சுகாசினி பூஜைகள் செய்து வைத்தும் 12 குழந்தைகளுக்கு கன்னியா பூஜை செய்து வைக்கப்பட்டது. இதையடுத்து மாலை 4.30 மணியளவில் சிருங்கேரி மடத்தில் லலிதா சஹஸ்ர நாம பாராயணம் செய்து அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பிராமண சங்கம் ராமேஸ்வரம் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி