Home /local-news /

துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!!

துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!!

துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!

துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு!

Ramanathapuram | இறந்த நாகராஜ்-க்கும், சரஸ்வதிக்கும் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணமாகி  சிநேகா(21), தேன்மொழி(19) ஆகிய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    துபாயில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு கொடுத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள தர்கா வலசையைச் சேர்ந்த சேது மகன் நாகராஜ் (52) என்பவர் வேலைக்காக துபாய் நாட்டிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இறுதியாக தனது அண்ணன் மகன் திருமணத்திற்கு கடந்த நவம்பர் 8-ம் தேதி ஒருமாத விடுப்பில் வந்த அவர் டிசம்பர் 8 ல் விடுமுறை காலம் முடிந்து துபாய் நாட்டிற்கு அதே கம்பெனிக்கு வேலைக்காக சென்றிருக்கிறார்.

    இந்நிலையில்சரஸ்வதிக்கு துபாயில் இருந்து தனது கணவர் நாகராஜ்விபத்தில் இறந்து விட்டார் என தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து இறந்த கணவருக்கு இறுதி சடங்குகளைமுறைப்படி நடத்த வேண்டும்.என்பதற்காக அவரின் உடலை துபாயில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் அவர்களிடம் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி சரஸ்வதி மனு அளித்துள்ளார்.

    இறந்த நாகராஜ்-க்கும்,சரஸ்வதிக்கும்கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணமாகி  சிநேகா(21),தேன்மொழி(19) ஆகிய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Dubai, Ramanathapuram

    அடுத்த செய்தி