Home /local-news /

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் கணித ஆசிரியர் கைது..

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் கணித ஆசிரியர் கைது..

போக்சோவில் கைது செய்யப்பட்ட  ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ்

போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ்

Ramanathapuram Pocso Case | பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பரமக்குடி அடுத்த திருவரங்கம் கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளியாக புனித இருதய மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ் என்பவர்  10ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவிகளுகக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்போது தேர்வின்போது கணித ஆசிரியர் மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

    அப்போது மாணவியின் கையை பாலியல் நோக்கத்துடன் இழுத்ததாகவும் மாணவி கையை தட்டி விட்டதற்கு தலையில் தட்டிக் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் கணித ஆசிரியர் மீது குழந்தைகள் நல அமைப்புக்கு தொடர்பு கொண்டு ரகசிய புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அதிகாரிகள் கணித ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் நடந்த பாலியல் சீண்டல் உண்மையென தெரியவந்ததால் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Pocso, Ramanathapuram

    அடுத்த செய்தி