ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே ஆனந்தூரில் உள்ள அரசு மதுபான கடையில் கத்தியை காட்டி மிரட்டி 2 லட்சத்து ஆறாயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாடானை தாலுகாவிற்கு உட்பட ஆர்.எஸ் மங்கலம் அருகே ஆனந்தூரில் அரசு மதுபானக்கடை உள்ளது.
இந்த மதுபான கடையில் விற்பனை நேரத்தில் நான்கு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து யாரும் இல்லாத நேரத்தில் விற்பனையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி விற்பனை செய்து கல்லாவில் வைத்திருந்த பணம் 2 லட்சத்து 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, விற்பனையாளர் திலீப்குமார் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில், அங்கு விரைந்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விற்பனையாளர் திலீப்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் யார் என்று விசாரித்து தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.