சாயல்குடி அருகே உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மேற்கூரையின் கட்டை முறிந்து விழுந்து 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ராமநாதபுரம்அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி வட்டத்தில் உள்ள வாகைக்குளம் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 42 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்ற நிலையில் பள்ளி மேற்கூரையின் கட்டை இடிந்து விழுந்ததில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி வைஷ்ணவி மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர் அகிலேஷ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பலத்த காயம் அடைந்த நிலையில் பள்ளியில் இருந்து அருகிலுள்ள சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்தனர். பின் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மாணவர்களின் கூட பயிலும் மற்ற மாணவர்கள் கதறி அழுத நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி மனம் கலங்க வைத்தது.
மேலும், 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொடக்கப்பள்ளி செய்யப்பட்டு வரும் நிலையில் கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டுமென அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.