Home /local-news /

ஒரு வார காலம் பங்கரில் பதுங்கிக் கொண்டோம் - உக்ரைன் நிலையை எடுத்துரைத்த ராமநாதபுரம் மாணவி..

ஒரு வார காலம் பங்கரில் பதுங்கிக் கொண்டோம் - உக்ரைன் நிலையை எடுத்துரைத்த ராமநாதபுரம் மாணவி..

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிக்கு ஆரத்தி எடுத்து கேக் வெட்டி வரவேற்பு

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிக்கு ஆரத்தி எடுத்து கேக் வெட்டி வரவேற்பு

Tamils in Ukraine | பல இந்திய மாணவர்கள் நடந்தே எல்லையை தாண்டியும் வந்தார்கள். இன்னும் பல மாணவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இன்னும் அதிகமான மாணவர்கள் அங்கே இருக்கிறார்கள்.

    உக்ரைனில் இருந்து வீடு திரும்பிய மருத்துவ மாணவிக்கு ஆரத்தி எடுத்து கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்.

    ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் நடந்து வரும் நிலையில் மீண்டும் உக்ரைனுக்கு சென்று படிப்பை தொடர முடியாத சூழலில் இந்தியாவிலேயே மீதம் உள்ள படிப்பை தொடரவும், மருத்துவப் படிப்பை நிறைவு செய்யவும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மருத்துவ மாணவி கோஷிகா குட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி தர்ஹா வலசையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஆசிரியர் துரைராஜ் என்பவரின்மகள் கோஷிகா குட்டி (வயது 23). இவர் திருச்செங்கோடில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2017ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் 1124 மதிப்பெண்கள் பெற்ற தேர்ச்சி பெற்று, நீட் தேர்வில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கோஷிகா குட்டி , உக்ரைன் நாட்டின் கிரோவோகாடு நகரில் உள்ள டோனெஸ்க் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து5 ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

    உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியதால் கோஷிகா குட்டி அச்சமடைந்த பெற்றோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இந்நிலையில் கோஷிகா குட்டிமார்ச் 6ம் தேதி கோவை விமானநிலையத்தை வந்தடைந்து தனது சொந்த ஊர் திரும்பினார்.

    மாணவி கோஷிகா குட்டி கூறியதாவது:-

    நான் இருந்தது உக்ரைன் நாட்டின் மத்தியப் பகுதியில் கிரோவோகாடு என்ற இடத்தில், சக மாணவியுடன்தனி வீடு எடுத்து தங்கி படித்து வந்தேன்.  போர் தொடங்கிய ஒரிரு நாட்களிலேயே உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தினர். எங்களால் உடனே கிளம்ப முடியவில்லை.

    நான் அங்கே பதுங்கிக் கொள்வதற்கு வசதி கிடையாது. இதனால் மற்ற மாணவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்று ஒரு வார காலம் பங்கரில் பதுங்கிக் கொண்டோம்.  பின்னர், சொந்த முயற்சியில் பல்கலைக் கழகத்தில் படித்த 100 மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் எல்லையை தாண்ட முடிவெடுத்தோம்.

    பேருந்தில் உக்ரைன் மத்தியப் பகுதியிலிருந்து ஹங்கேரி எல்லைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆனது. பல இந்திய மாணவர்கள் நடந்தே எல்லையை தாண்டியும் வந்தார்கள். இன்னும் பல மாணவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இன்னும் அதிகமான மாணவர்கள் அங்கே இருக்கிறார்கள்.

    உக்ரைன் எல்லையை கடந்து ஹங்கேரி நாட்டிற்கு வந்த பின்னர் இங்கு வந்து சேரும் வரையிலும் தேவையான உதவிகளை மத்திய அரசுசெய்து தந்தது.  இன்னும் 1 1/2 ஆண்டு படிப்பு மீதம் உள்ளது. தற்போது உள்ள நிலையில் மீண்டும் அங்கு சென்று படிப்பை தொடர முடியாது.

    இந்தியாவிலேயே மீதம் உள்ள படிப்பை தொடரவும், மருத்துவப் படிப்பை நிறைவு செய்யவும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அம்மாணவி கோரிக்கை வைத்தார்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Russia - Ukraine

    அடுத்த செய்தி