Home /local-news /

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் 

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் 

வாழும்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் ராமேஸ்வரம் கோவிலில் சா

Sri Sri Ravi Shankar | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் தரிசனம் செய்தார்.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் தரிசனம் செய்தார்.

    வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் தனி ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கேம்ப் பகுதிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் வாயிலில் ராமேஸ்வரம் புரோகிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது,

    மேலும், ஏராளமான பொதுமக்கள் ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ்விடம் ஆசிர்வாதங்கள் வாங்கினர். அதைத் தொடர்ந்து கோவிலுக்கு சென்று ராமநாத சுவாமி சன்னதியில் மற்றும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார், முன்னதாக திருக்கோவிலில் ரவிசங்கர் சார்பில் சிறப்பு 108 சங்காபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய வந்த ரவிசங்கர் குருதேவ்விற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றடைந்தார்.

    அவரிடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதி அடைகின்றன. அதனால் கோயில் முழுவதும் உயரமான பந்தல் அமைத்து தரகோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர்மன்றத் துணைத் தலைவர் அவர்களை பெங்களூர் வந்து நேரில் பார்க்கும்படி கூறிச் சென்றார்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Rameshwaram

    அடுத்த செய்தி