ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 18 அடி உயரமுள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, ராமநாதசுவாமிக்கும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தங்க ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர், கௌரி அம்பாள் எழுந்தருளி மேள வாத்தியங்கள் முழங்க மூன்றாம் பிராகாரத்தில் உலா வந்தனர்.
அதன் பின்பு, ராமநாதசுவாமிக்கும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் சன்னதியின் எதிரே உள்ள 18 அடி உயரமுள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.