Home /local-news /

பாம்பன் தூக்குபாலத்தில் மிதவை கப்பல்கள் கடந்து சென்றதை ரசித்த சுற்றுலா பயணிகள்..

பாம்பன் தூக்குபாலத்தில் மிதவை கப்பல்கள் கடந்து சென்றதை ரசித்த சுற்றுலா பயணிகள்..

Pamban

Pamban Bridege

Ramanathapuram District | பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற  மூன்று மிதவை கப்பல்கள், ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து பார்வையிட்டு ரசித்து  சென்றனர்.

    பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற மூன்று மிதவை கப்பல்கள், ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து பார்வையிட்டு ரசித்து சென்றனர்.

    ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில் பாலம், இந்த பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு சுமார் 108 ஆண்டுகளை கடந்த போதிலும் தற்போது வரையிலும் கம்பீரமாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெளி மாநிலத்திற்கு செல்லும் கப்பல்கள் கடல்சார் துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

    இந்த நிலையில்,  தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அலுவலகத்தில் அனுமதி பெற்று பாம்பன் துறைமுக அதிகாரிகள் முன்னிலையில் , மிதவை கப்பல்கள் மற்றும் சரக்கு கப்பல்கள் கோவாவில் இருந்து காக்கிநாடா, மும்பையில் இருந்து சென்னை, கொச்சியில் இருந்து கொல்கத்தாவிற்கும் செல்லும் மிதவை கப்பல் மற்றும் சரக்கு கப்பல்கள் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்றன.

    கப்பல்கள் கடந்து செல்லும் காட்சியை பாம்பன் சாலை பாலத்தின் மீது நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு புகைப்படம், வீடியோ எடுத்து சென்றனர்.  இதனால் பாம்பன் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி