இராமநாதபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 21 ஆயிரத்தி 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக தேரிருவேலி கிராமத்தைச் சேர்ந்த அனீஸ் என்பவர் நான்கு சக்கர வாகனத்தில் வந்தார்.
அவரின் காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தியதில் எந்த ஒரு முறையான ஆவணங்களும் இன்றி ஒரு லட்சத்து 21 ஆயிரத்தி 500 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மாவட்ட கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.