ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தில் உள்ள 10-வது வார்டு முகமது கோயா தெரு மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.எஸ். மங்கலம் 10-வது வார்டுக்கு உட்பட்டது முகமது கோயா தெரு. இத்தெருவில் தண்ணீர் தொட்டி சேதமாகி உள்ளதால்,
கடந்த ஆறு மாதமாக குடிநீர் சரிவர வருவதில்லை என்றும், இப்பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டி சேதமாகி பயனற்ற நிலையில் உள்ளதால் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டு வருவதால் புதிய தொட்டி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும், கழிவு நீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைந்து சரிசெய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.