இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சுவர் விளம்பரங்கள், கம்பங்கள், கொடிகள், பேனர்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், தேர்தல் விதிமுறைகளின்படி இராமேஸ்வரம் பகுதியில் உள்ள 21 வார்டுகளில் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. கட்சி சின்னங்கள், சுவரொட்டிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
முக்கிய இடங்களில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், கல்வெட்டுகள் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.