இராமேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் மஹாலில் 50-க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தாக்கம் அதிகரிப்பது காரணமாக முன்களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தவனை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என முன்களப்பணியாளர்களுக்கு ஒவ்வொரு பகுதியாக முகாம் அமைக்கப்பட்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இராமேஸ்வரத்தில் உள்ள காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தாத பொதுமக்களுக்கும் செலுத்தப்பட்டது.
இம்முகாமில் இராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் இராமமூர்த்தி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அழகுவேல் மணி ஆகியோர் கலந்து கொண்டு தலைமை வகித்தனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.