Home /local-news /

மீனவர்கள் வேலை நிறுத்தம்.. 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிற்கின்றன..

மீனவர்கள் வேலை நிறுத்தம்.. 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிற்கின்றன..

ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்–800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிற்

ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்–800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிற்

ராமேஸ்வரத்தை சேர்ந்த  ஒரு விசைபடகையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் அவர்களது விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமேஸ்வரம் பகுதியில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடி அனுமதி டோக்கன் சீட்டு பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்,

    ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு, மயிலட்டி கடல் பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, ராமேஸ்வரத்தை சேர்ந்த  ஒரு விசைபடகையும் அதிலிருந்து 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

    இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் மயிலிட்டி கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர், வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் இம்மாதம் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார், இந்த உத்தரவைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

    இதனைக் கண்டித்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை கண்டித்தும், அதே போல மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் , மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும், இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது,

    இந்த மீன் பிடி தொழிலில் நேரடியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும்,சார்பு தொழிலாக 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தினால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

    இலங்கை கடற்படையால் கடந்த மாதத்தில் இருந்து இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    உடனே மத்திய மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களின் மீது அக்கறை கொண்டு வாழ்வாதாரத்தை காத்திட வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

    எப்போதும் பரபரப்பாக காணப்பட கூடிய ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram, Srilanka

    அடுத்த செய்தி