Home /local-news /

இராமநாதபுரம்: ரயில்பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு

இராமநாதபுரம்: ரயில்பாதை மின்மயமாக்கும் பணி நிறைவு

இராமநாதபுரம்: இரயில்பாதை மின்மயாக்கும் பணி நிறைவு

இராமநாதபுரம்: இரயில்பாதை மின்மயாக்கும் பணி நிறைவு

இராமநாதபுரத்தில் இருந்து மானாமதுரை இடையே இரயில்பாதை மின்மயமாக்கும் பணி நிறைவடைந்தது. அதன்பின் சிலநாட்கள் கழித்து இராமேஸ்வரம் வரை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ‌

    இராமநாதபுரத்தில் இருந்து மானாமதுரை இடையே இரயில்பாதை மின்மயமாக்கும் பணி நிறைவடைந்தது. அதன்பின் சிலநாட்கள் கழித்து இராமேஸ்வரம் வரை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ‌


    மதுரை - இராமேஸ்வரம் இடையேயான 161 கிலோ மீட்டர் தொலைவு இரயில்பாதையை மின்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.


    இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக மதுரை - மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் ரெயில் பாதையை கடந்த ஆண்டு முழுமையாக மின்பாதையாக மாற்றி முடிக்கப்பட்டு உள்ளது.


    இதன் தொடர்ச்சியாக மானாமதுரை - மண்டபம் இடையேயான 96 கிலோ மீட்டர் தூரத்திலான ரெயில்பாதை மின்பாதையாக மாற்றும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. 9.5 மீட்டர் உயரம் முதல் 10.6 மீட்டர் உயரத்திலான மின்கம்பங்கள் அமைத்து மின்கேபிள்கள் பதிக்கும் பணி முடிவடைந்து உள்ளது.


    இராமநாதபுரம் ரெயில் நிலைய பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதிர்வுகளை தாங்கும் வகையிலான தண்டவாளங்கள் மாற்றப்பட்டு உள்ளன.


    மானாமதுரை முதல் இராமநாதபுரம் வரையிலான இந்த பணியில் 18 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 257 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மானாமதுரை - ராமநாதபுரம் வரையிலான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.


    இதனை தொடர்ந்து, இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்று உறுதி செய்யப்பட்டது.விரைவில் இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.


    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி