Home /local-news /

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இனி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இனி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை  ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திறந்துவைத்தார்.

    ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திறந்து வைத்தார்.

    சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் இரயில்கள் ராமநாதபுரம் வழியாக தான் செல்கின்றது. தினமும், சராசரியாக 3,000 பேர் வரை இங்கு வந்து செல்கின்றனர்.

    இதனால், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் இந்த ரயில்வே நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. போதிய குடிநீர் வசதி இங்கு இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதையடுத்து, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பரிந்துரையின் பேரில் பவர் குரூப் பவுண்டேஷன் அறக்கட்டளையின் சார்பில் மர்ஹும் ஹாஜியானி குபுராபீவி அவர்களின் நினைவாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது.

    அறக்கட்டளையின் தலைவர் முகமது ஜாஹிர் ஹுசைன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் முன்னாள் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகரன் மற்றும்  பலர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Alagesan R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி